பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

Update: 2021-04-21 11:26 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து பணிமனை முன்பு வார ஓய்வை நிறுத்தக்கூடாது,ஊதியம் பறிக்கக் கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்  தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச.,சி.ஐ.டி.யு.,ஏ.ஐ.டி.யு.சி.,டி.டி.எஸ்.எஃப்,ஐ.,என்.டி.யு.சி.,உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வார ஓய்வை தடுக்கக்கூடாது,போக்குவரத்துக்கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது,தொழிலாளர்களுக்கு சம்பள பறிப்பு செய்யக்கூடாது,தொழிலாளர் துறை அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்றும், பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் பணிமனையில்  வெயில் தாக்கத்தை உணர்ந்து போக்குவரத்து துறை மூலம் தொழிலாளர்களுக்கு மோர் உள்ளிட்ட நீர் ஆதார பானங்களை  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News