தமிழகத்தில் எதிர்கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது :மாநில துணை தலைவர் துரைசாமி

தமிழகத்தில் எதிர்கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது மாநில துணை தலைவர் துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-24 17:15 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்துக்கு வந்கத மாநில பா.ஜ.க. துணை தலைவர் துரைசாமி 

தமிழகத்தில் எதிர்கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது என்றார் அக்கட்சியின் மாநில துணை தலைவர் துரைசாமி. 

பா.ஜ.க. சார்பில் குமாரபாளையம் தொகுதி படவீடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில துணை தலைவர் துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

இதில் அவர் மேலும் கூறியதாவது: கடல் நடுவே அதிக செலவு செய்து பேனா சிலையை நிறுவ வேண்டுமா? என அவர்கள்தான் உணர வேண்டும். பல வகைகளில் சுமையில் உள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். நிதி சுமை நிலையில் காலம் தாழ்த்தி கூட செய்யலாம். இப்போதே செய்ய வேண்டும் என்பதல்ல. இரண்டாவது பெண்மணி, பழங்குடியின முதல் பெண்மணி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதுவும் சாத்தியமாக முடியுமா? என்ற கேள்வி 140 கோடி மக்கள் மனதில் எழுகிறது. இதுவும் சாத்தியமாகும் என பிரதமர் நிரூபித்து வருகிறார்.

பாரத பிரதமருக்கும், பதவியேற்கவிருக்கும் அம்மையாருக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகள். மின் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 51 சதவீதம் உயர்த்தி இருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனால் செய்தியாளர்களை சந்தித்து இந்த உயர்வு  எத்தரப்பு மக்களையும் பாதிக்காது என தைரியமாக சொல்கிறார். மத்திய அரசு கொடுத்த மானிய தொகையை உற்பத்தி திறனுக்கு பயன்படுத்தாமல், வேறு கடன் கட்டினேன் என மழுப்புகிறார். எத்தரப்பு மக்களையும் பாதிக்காது என்ற அந்த ஒரு வார்த்தைக்கே கண்டன கூட்டம் போடவேண்டும். அதை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை எந்த கட்சிக்கும் தமிழகத்தில் இல்லை. பா.ஜ.க. அண்ணாமலையை தவிர. பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை.  பா.ஜ.க.தான் எதிர்கட்சியாக செயல்பட்டு கண்டன கூட்டங்கள் நடத்துகிறோம், போராடுகிறோம் .எனவே அனைவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். என்றார் துரைசாமி

மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், மாவட்ட பொது செயலர் நாகராஜன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் மகேஷ், நகர தலைவர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Tags:    

Similar News