தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2025-03-08 15:40 GMT

தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


குமாரபாளையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் , குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகி விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பள்ளிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய , மாநில அரசுகளை கண்டித்து மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் புகைப்படங்களை எந்தி கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 08nmksiv01

குமாரபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News