தேசிய யோகா போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்

தேசிய யோகா போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.;

Update: 2024-11-22 16:45 GMT

படவிளக்கம் :

தேசிய யோகா போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்

தேசிய யோகா போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் - தேசிய யோகா போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

தேசிய அளவிலான யோகா போட்டிகள் ஹைதராபாத் நகரில் நடந்தது. இதில் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கனா, ஹரியானா, பஞ்சாப், கோவா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சார்பில்81 பேர் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி மையத்திலிருந்து 22 பேர் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். இதில் யோகா மாணவி பரணிஸ்ரீ சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அணிக்கு பெருமை சேர்த்தார். தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இதற்கு பரணிஸ்ரீ உறுதுணையாக இருந்தார். தமிழ்நாடு யோகா சங்க செயலர் அரவிந்த், அரவிந்த் யோகா பயிற்சி மைய நிர்வாகி மதுமிதா, தமிழ்நாடு பயிற்சியாளர் பரணிதரன், பயிற்சியாளர்கள் சந்தியா, வினோத் உள்பட பலர் பங்கேற்றனர். சசதனை படைத்த யோகா சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா அரவிந்த் யோகா பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் சாதனையாளர்களை பெற்றோர் உள்பட மைய நிர்வாகிகள் அனைவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News