குமாரபாளையத்தில் தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன ஆலோசனை கூட்டம் தலைவர் மதிவாணன் தலைமையில் குமாரபாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் கூறுகையில், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் அழைப்பின் பேரில் உதவி கமிஷனர் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டின் படி, தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவரான நான் உள்ளிட்ட 18 விசைத்தறியாளர்கள் இலங்கைக்கு சென்றோம். இலங்கையில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சே சந்தித்து பேசினோம்.
அப்போது பஸில் ராஜபக்சே, 2ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே ஜவுளி தொழில் இலங்கைக்கு வந்துவிட்டது. பல விசைத்தறி கூடங்களும் செயல்பட்டன. தற்போது ஆயத்த ஆடை தொழில் பெருமளவில் நடைபெறுகிறது. ஆயத்த ஆடைகள் தயார் செய்ய தேவையான துணிகள் இறக்குமதிதான் செய்கிறோம்.
நாட்டு மக்களுக்கு தேவையான துணிகள் தேவையான அளவிற்கு உற்பத்தி ஆவதில்லை. விசைத்தறி தொழிலை இலங்கையில் நிறுவுங்கள். அதற்கு கட்டிட பொருட்கள், தறிகளையும், கச்சா பொருளான நூல்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம். அனைத்து வசதிகளை செய்து தருகின்றோம். புதிதாக நிறுவப்படும் நிறுவனங்களுக்கு 100 சதவீத வருமான வரி கொடுக்கப்படும் என தெரிவித்ததாக என மதிவாணன் கூறினார்.
இந்த பேட்டியின் போது, டெக்ஸ்டைல் கார்மெண்ட்ஸ் அசோசியேசன் தலைவர் சுப்பரமணி, தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன உதவி தலைவர் கருணாநிதி, சம்மேளன உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.