தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை

சட்டிஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2024-08-08 01:11 GMT

சட்டிஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 46வது தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டி ஆக 1 முதல் 5 வரை நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு, இந்திய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தும், தமிழகத்திற்கு 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த பூவிழி தங்கப் பதக்கத்தையும், மற்றும் ஆண்ட்ரூஸ் தங்க பதக்கத்தையும், சென்னை சவீதா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்ரீதர் வெள்ளிப் பதக்கத்தையும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்ரீ வெள்ளி பதக்கத்தையும், மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில மாவட்ட வீரர்கள் புஷ்பராஜ், கோகுல்ராஜ், அரவிந்த், வில்வநாதன், ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய நடுவராக தேவிகா, தமிழக பயிற்சியாளராக காசிமாயன் பணியாற்றினர். இதனை தமிழக கை மல்யுத்த சங்கத்தின் தலைவர் பாலாஜி தங்கவேல், பொதுச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் விளையாட்டு வீரர்களை வாழ்த்தினர்.

Tags:    

Similar News