குமாரபாளையம்; அரசு தட்டச்சு தேர்வு துவக்கம்
குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசு தட்டச்சு தேர்வு துவங்கியது.;
அரசு தட்டச்சு தேர்வு துவக்கம்
குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசு தட்டச்சு தேர்வு துவங்கியது.
குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறையின் சார்பாக, இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது. 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இத்தேர்வில் 34க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 345 மாணவர்களும், ஆயிரத்து 403 மாணவியர்களும் பங்கேற்றனர்.
இத்தேர்வில் முந்தைய ஆண்டை விட 425க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார், தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று தேர்வினை கண்காணித்தார். அனைத்து துறையிலும் கணினி பயன்பாடு அதிகம் என்பதால், நாளுக்கு நாள் தட்டச்சு கற்க வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.