நிதி ஒதுக்கீட்டுக்குப்பின் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள்: தாசில்தார் தகவல்

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள், நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் தொடரும் என தாசில்தார் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-02 12:00 GMT

குமாரபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுக்கா அலுவலகம். 

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள், நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் தொடரும் என தாசில்தார் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால் கட்டுமானப் பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் எனக் கூறினார்.

இந்நிலையில் தாலுகா அலுவலகம் வருவதாக தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் ஈ.சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. கட்டுமான பணி தாமதமாவதால் ஓரிரு கடைகள் போதிய வருமானமின்றி காலி செய்யப்பட்டன. மீதமுள்ள பிற கடையினர் விரைவில் கட்டுமான பணிகள் முடிய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News