பள்ளிபாளையம் கமிஷனராக கூடுதல் பொறுப்பேற்கும் குமாரபாளையம் கமிஷனர்
பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனராக குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் கூடுதல் பொறுப்பேற்கவுள்ளார்.;
ஸ்டான்லிபாபு, குமாரபாளையம் கமிஷனர்.
பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனராக குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் கூடுதல் பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்திரவின் பேரில் பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பேற்க உத்தரவு வந்துள்ளது. அதன்படி குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்துடன் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்தையும் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்ற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.