சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கீடு

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.;

Update: 2022-02-06 11:15 GMT

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. தமிழக உள்ளாட்சித்  தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் வேட்புமனு தாக்கல் ஜன. 28ல் துவங்கி பிப். 4ல் நிறைவு பெற்றது. குமாரபாளையம் நகராட்சியில் 250 வேட்புமனு தாக்கல் செய்ததில் 6 மனுக்கள் நீக்கம் செய்த நிலையில் 244 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தாங்கள் கேட்ட சின்னங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தினை துவக்கியுள்ளனர்.

Tags:    

Similar News