சுயேட்சைக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் வீடுகளின் முன் திரண்ட அதிமுகவினர்
குமாரபாளையத்தில் சுயேட்சைக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் வீடுகளின் முன் திரண்ட அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது;
குமாரபாளையத்தில் சுயேட்சைக்கு வாக்களித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வீடுகளின் முன்அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்கண்ணன், நகர மன்ற தலைவர் தேர்தலில் 18 ஓட்டுக்கள் பெற்று நகரமன்ற தலைவரானார். இவருக்கு அ.தி.மு.க . மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் அதரவு கொடுத்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் அதரவு கொடுத்ததால், 3 கவுன்சிலர்கள் மற்றும் அவரது கணவன்மார்கள் 3 பேர் மேலும் அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் ஆகிய 7 பேர் அ.தி.மு.க. தலைமை கழகத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த 3 கவுன்சிலர்கள் தேர்தல் செலவிற்கு கட்சியினர் தொகை கொடுத்ததாகவும், சுயேட்சைக்கு ஓட்டளித்து அவரை வெற்றி பெற செய்ததால், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. 24 மணி நேரம் கால அவகாசம் கொடுக்க ப்பட்டதால் இன்று இந்த பிரச்னை பெரிதாகும் என எதிர்பார்கப்படுகிறது. நேற்று நகரமன்ற கூட்டம் நடந்த நிலையில், இன்று நியமன குழு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.