குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை
குமாரபாளையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குமாரபாளையம் அருகே பாறையூரில் வசித்து வந்தவர் மாதேஸ்வரன் (வயது58.) குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலை 02:00 மணியளவில் வேலைக்கு செல்வதாக, வீட்டிலிருந்து மனைவி ராஜேஸ்வரியிடம்ட கூறி சென்றுள்ளார். 02:45 மணிக்கு போன் செய்து மனைவி கேட்ட போது டீக்கடையில் இருப்பதாக கூறியுள்ளார்.
காலை 06:00 மணியளவில் இவருடன் பணியாற்றும் கனகராஜ் என்பவர், ராஜேஸ்வரிக்கு போன் செய்து குமாரபாளையம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்க், பில்லரில் கயிற்றின் மூலம் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டிருப்பதாக கூறி உள்ளார். அவரை அங்குள்ள நபர்களின் உதவியுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காட்டினர்.
இவரை பரிசோத்தித்த டாக்டர் மாதேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபர் மாதேஸ்வரனுக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இருப்பதாகவும். அதிக மன உளைச்சலில் வீட்டில் உள்ளவர்களிடம் சத்தம் போட்டு பேசி வருவதாகவும், தன்னால் வேலை செய்யமுடியவில்லை எனவும் கூறியதாக, மனைவி ராஜேஸ்வரி போலீசில் கூறியுள்ளார்.