கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
கோடை மழையால்
பொதுமக்கள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் கோடை மழையால்
பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்கு ஆளாகினர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:
கடும் வெயிலால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சம் கொண்டனர். வியாபாரம் இல்லாமல் போனது. இந்த கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை ஏற்பட்டு, தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வெளியில் வந்து கொண்டுள்ளனர். இதனால் சாலையோர வியாபாரிகளுக்கு கூட வியாபாரம் ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் கோடை மழையால்
பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.