வணிக வளாகம் மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக வடமாநில நபர் மிரட்டல்
குமாரபாளையம் அருகே வணிக வளாகம் மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக வடமாநில நபர் மிரட்டல் விடுத்தார்.;
வணிக வளாகம் மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக வடமாநில நபர் மிரட்டல்
குமாரபாளையம் அருகே வணிக வளாகம் மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக வடமாநில நபர் மிரட்டல் விடுத்தார்.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே வணிக வளாகம் உள்ளது. நேற்று காலை 10:00 மணியளவில், இந்த வணிக வளாகம் மேலே ஏறி நின்று, குதித்து தற்கொலை செய்து கொள்வதாக வட மாநில இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து வணிக வளாக நிர்வாகத்தினர், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, நேரில் சென்ற போலீசார் அவனை கீழே இறக்கி, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அவன் யார்? எந்த ஊர்? எதற்காக இது போல் நடந்து கொண்டான்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். வணிக வளாகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே வணிக வளாகம் மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக வடமாநில நபர் மிரட்டல் விடுத்ததையடுத்து, அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.