குமாரபாளையத்தில் கரும்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் கரும்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-03-16 11:23 GMT

குமாரபாளையத்தில் கரும்பு விவசாயதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையத்தில் கரும்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் குருசாமி தலைமை வகித்தார்.

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்காராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும், தமிழகத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் உள்ள நிலையில், அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும், கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபடும் போது, பாதுகாப்புடன் கூடிய சீருடை வழங்க வேண்டும், வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் கொடுக்க வேண்டும், கரும்பு வெட்டும் போது ஏற்படும் விபத்து, மருத்துவ செலவிற்கு அரசும், ஆலை நிர்வாகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும், காப்பீடு திட்டம் அமல்படுத்தி, பிரிமியம் தொகையை ஆலை நிர்வாகிகள் செலுத்த வேண்டும், மரணம் அடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், துரைசாமி, சங்க கிளை நிர்வாகிகள் சம்பூர்ணம், சின்னத்தாயி, குமார், சக்திவேல், முருகேசன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை விவசாயிகள்  தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கி விட்டு சென்றனர்.

Tags:    

Similar News