குமாரபாளையம் அருகே கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
Sugarcane Farmers Association Conference;
பள்ளிபாளையம் அருகே கரும்பு விவசாயிகள் சங்க 5வது மாநாடு நடைபெற்றது.
பள்ளிபாளையம் அருகே கரும்பு விவசாயிகள்சங்க 5வது மாநாடு நடைபெற்றது.
பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை கிளை சார்பில், கரும்பு விவசாயிகள் சங்க 5வது மாநாடு பாப்பம்பாளையம் பகுதியில் தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. பொது செயலர் ரவீந்திரன், செயலர் நல்லாக்கவுண்டர், பொருளர் முத்துசாமி, மாவட்ட செயலர் பெருமாள், மாநில பொருளர் கோபிநாத் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில், ஒரு டன் கருப்புக்கு மத்திய, மாநில அரசுகள் 5 ஆயிரம் விலை வழங்க வேண்டும், வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு கரும்புக்கு பரிந்துரை விலையை எஸ்.ஏ.பி. அறிவித்து வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு தரவேண்டிய 70 கோடி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், முத்தரப்பு கூட்டம் நடத்தி வெட்டுக் கூலியை முறைப்படுத்த வேண்டும்,அதில் 50 சதவீதம் சர்க்கரை ஆலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 152 விவசாயிகள் கலந்து கொண்டனர்.