குமாரபாளையத்தில் மரம் வெட்டியது குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
குமாரபாளையம் அருகே மரம் வெட்டியவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்தனர்.
குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றினை அப்பகுதியினர் வெட்டியுள்ளனர். இது குறித்து புகார் வந்ததின் பேரில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை தாசில்தார் தமிழரசியிடம் வழங்கினர். தாசில்தார் இதனை ஆர்.டி.ஓ.-விற்கு அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.