குமாரபாளையத்தில் நடந்த ஓவிய போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்
குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.;
குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.
குமாரபாளையம் சன்ரைஸ் அகாடமி, லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பின் சார்பில் ஓவியம், கைவினை பொருட்கள் பயிற்சி, யோகா, உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று வயது முதல் பல்வேறு வயது பிரிவின் கீழ் ஓவியப்போட்டிகள் அமைப்பாளர் பூங்கொடி தலைமையில் நடந்தது. கராத்தே பயிற்சியாளர் பாஸ்கரின் ஷேடோகாய் கராத்தே டூ இன்டர்நேஷனல் ரகுவா சிட்டோரியா அமைப்பின் சார்பில், பயிற்சி மாணவர்கள் கராத்தே சாதனைகள் செய்து காட்டினர் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். சிறந்த ஓவியங்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பரிசுகள் என ஒவ்வொரு வயது பிரிவின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் கியோ குசின் கராத்தே பயிற்சி மையம் சார்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் மற்றும் பட்டைகள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் கியோ குசின் கராத்தே பயிற்சி மையம், உடையார் பேட்டை கிளை சார்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தகுதி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பட்டைகள் வழங்கப்பட்டது. இதில் மஞ்சள் பட்டை 2 நபர்களுக்கும், நீல நிற பட்டை 6 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. அக்னி சிறகுகள் சீனிவாசன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், தி.மு.க. கிளை செயலர் ஆறுமுகம், கராத்தே பயிற்சியாளர் எகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் கியோகுசின்காய் கான் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழா பயிற்சியாளர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் சேலம், அருள்ராஜ், பவானி லட்சுமணன், குமாரபாளையம் யுவராஜ் ஆகிய மூவருக்கும் ஜப்பான் நாட்டிலிருந்து, பயிற்சி தகுதியின் அடிப்படையில் வரவழைக்கப்பட்ட கருப்பு பட்டைகள் மற்றும் சான்றிதழ்களை தொழிலதிபர் இளங்கோ வழங்கி வாழ்த்தினார். 500க்கும் மேற்பட்ட கருப்பு பட்டைகள் பெற்று தந்தவரும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெற வைத்தல், உலக அளவிலான போட்டியில் நடுவராகவும் செயல்பட்ட பயிற்சியாளர் தியாகராஜனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பயிற்சி மாணவர்களும் தியாகராஜனை பாராட்டினர்.
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6, 7 8ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. சென்னை நேதாஜி நவபாரத் பவுண்டேஷன் தலைவர் மகேஷ் பங்கேற்று, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழும், சீருடையும் வழங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓபிளிராஜ், பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, டாக்டர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், நலவாரியம் செல்வராஜ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலந்துகொண்டனர்.