குமாரபாளையத்தில் பள்ளி திறக்காததால் வெளியில் காத்திருந்த மாணவர்கள்

குமாரபாளையத்தில் காலை 9 மணி வரை பள்ளி திறக்காததால் மாணவ, மாணவியர் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Update: 2022-03-22 14:15 GMT

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை 9 மணி வரை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியின் மெயின் கேட் திறக்காததால் மாணவ, மாணவியர் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

குமாரபாளையம் நகரின் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஓரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை 09:00 மணி வரை பள்ளியின் நுழைவு கேட் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் அனைவரும் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இது பற்றி பெற்றோர் ஆசிரியர் கழக கவுரவ பொறுப்பாளர் பிரகாஷ் கூறுகையில், தினமும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய ஆயாக்கள்தான் கேட் திறப்பது வழக்கம். காலை 09:00 மணி வரை ஆயா வர தாமதம் ஆனதால் இந்த நிலை ஏற்பட்டது. வகுப்புகள் நடத்த தாமதம் ஆனதாலும், மாணவ, மாணவியர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததாலும், அப்பகுதி கவுன்சிலர் ராஜு மற்றும் பெற்றோர்கள் பூட்டை உடைத்து கேட் திறந்து விட்டனர். இந்த பள்ளியில் இரு பள்ளிகளிலும் சேர்ந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என கூறினார்.

சில நாட்கள் முன்பு இதே பள்ளியில் உடல்நலம் சரியில்லாமல் வகுப்பறையில் தூங்கிய மாணவனை கவனிக்காமல், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், மெயின் கேட் ஆகியன பூட்டிச் சென்றனர். நள்ளிரவில் கண் விழித்த மாணவர் அலறல் சத்தம் கேட்டு, ஆசிரியை ஒருவரின் வீட்டில் சாவி வாங்கி வந்து, மாணவனை வெளியே அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News