பள்ளி நேரத்தில் புறவழிச்சாலையில் கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

சேலம்- கோவை புறவழிச்சாலையில் பள்ளி நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

Update: 2022-04-22 12:45 GMT

சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் பள்ளி நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

சேலம்- கோவை புறவழிச்சாலையில் பள்ளி நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் அருகில் துவக்கப்பள்ளி ஆகியன செயல்பட்டு வருகிறது. காலை 08:30 மணி முதல் சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து அதிக அளவிலான மாணவர்கள் இந்த பள்ளிகளுக்கு வருகின்றனர்.

ஆனால் இவர்கள் அதிக வாகனங்கள் வேகமாக சென்று வருவதாலும், போக்குவரத்து போலீசார் கத்தேரி பிரிவு பகுதியில் நிற்காமலும் இருப்பதால் சாலையை கடக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். மிகவும் முக்கியமான நேரமான காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் இங்கு போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைக்கப்படவேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News