சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்த அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.;
சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்த அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், சமூக நீதி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முதல்வர் ரேணுகா பேசியதாவது:
பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் ஏற்றத்தாழ்வுகள், பெண் அடிமை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் கல்வி உள்ளிட்டவைகளுக்காக பாடுபட்டவர். தனது 18 வயது முதல் இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். தீண்டாமை மற்றும் ஜாதி கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இவரது பங்கு அளப்பறியது. ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இந்த பகுத்தறிவு பகலவன்.
ஜாதிய பாகுபாடுகளை களைய போராடியவர். இவரது பிறந்த நாள் செப்டம்பர் 17ல் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அவரது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.