ஜே கே கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைமையில் மாநாடு
ஜே கே கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைமையில் மாநாடு நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நிகழ்வின் தலைப்பு "மாணவர் தலைமையில் மாநாடு"(SLC)
நிகழ்விடம் : நடராஜா வித்யாலயா கலையரங்கம் .ஜே கே கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
நிகழ்ச்சி நடைபெற்றத் தேதி : (8/07/2023) சனிக்கிழமை
நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் : 1:30 பிற்பகல் முதல் 3:30 வரை.
தலைமை : ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனத்தின்தாளாளர்.ஸ்ரீமதிசெந்தாமரை தலைமையேற்றார்.
முன்னிலை : ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனத்தின்நிர்வாக இயக்குநர் சரவணா முன்னிலை வகித்தார்
தொகுப்புரை:
A. சந்தோஷ் குமார்
(பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவு) தொகுப்புரை வழங்கினார்
வரவேற்புரை :
A. நந்தகுமார் (பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல்பிரிவு) வரவேற்று பேசினார்.
நிகழ்வின் சிறப்புரை:
பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் மாசுபடுதல் பற்றிய தகவல்களை மிகச் சிறப்பான முறையில் சிறப்புரையாற்றினர்.
மாசுபடுதலின் வகைகள் மற்றும் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
*காற்று மாசுபாடு
*நில மாசுபாடு
*நீர் மாசுபாடு
*ஒலி மாசுபாடு
காற்று மாசுபாட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்:
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது, தொழிற்சாலைகளும், வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர் மற்றும் கட்டிடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமிலமழை, பொழிகிறது .
இவை மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பாதிப்படைய செய்கிறது என்பதைப் பற்றி தெளிவாக விளக்கினர்.
காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
கார்பன்-டை-ஆக்சைடு போன்ற கெடுதலான வாயுக்களை மரங்கள் உறிஞ்சுவதனால் அதிக மரங்களை நடுதல் வேண்டும்.
தொழிற்சாலைகள் மூலம் வெளிவரக்கூடிய நச்சுப் புகைகளை வளிமண்டலத்தில் கலக்க விடாமல் காற்று வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம் என காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தெரிவித்தனர்.
நில மாசுபாடு, நில மாசுபடுதலின் வகைகள்
*வெப்ப மாசுபாடு
*இரசாயன மாசுபாடு
*உயிரியல் மாசுபாடு
வெப்ப மாசுபாடு என்பது மனித நடவடிக்கைகளால் மண்ணின் வெப்பநிலை உயர்வதைக் குறிக்கிறது. இது தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது அதிக ஆற்றல் நுகர்வு உள்ள பகுதிகளுக்கு அருகில் நிகழலாம். உயர்ந்த மண்ணின் வெப்பநிலை மண் உயிரினங்கள், ஊட்டச்சத்து கிடைக்கும் தன்மை மற்றும் ஒட்டுமொத்த மண்ணின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.
தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பொருட்கள் மண்ணில் அறிமுகப்படுத்தப்படும் போது இந்த வகையான மண் மாசுபாடு ஏற்படுகிறது.
இது தொழில்துறை நடவடிக்கைகள், விவசாய நடைமுறைகள், முறையற்ற கழிவுகளை அகற்றுதல் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றால் நீளமானது மாசடைகிறது என்று நிலம் மாசுபடுதலை பற்றிய கருத்துக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததன.
நீர் மாசுபடுதலின் விளைவுகள், நீர் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நீர் மாசுபாடு மீன், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மாசுபடுத்திகள் தண்ணீருக்குள் நுழைந்து நேரடியாக நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் அல்லது கொல்லலாம் அல்லது அவை உணவுச் சங்கிலியில் குவிந்து, உணவுச் சங்கிலிக்கு மேலே உள்ள விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அதனைத் தொடர்ந்து நீர் மாசுபடுததலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளானநீர்நிலைகளில் நுழையும் மாசுகளின் அளவைக் குறைப்பது அல்லது நீக்குவது. சிறந்த தொழில்துறை நடைமுறைகள், குறைந்த நச்சு இரசாயனங்கள் மற்றும் சிறந்த கழிவு மேலாண்மை நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் நீர் மாசுவை தடுக்கும் முறையும் என்று தெரிவித்தனர்.
ஒலி மாசுவின் விளைவுகள், ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு முறைகள்
இரைச்சல் அளவைக் குறைக்க பூங்காக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற பொது இடங்களில் அமைதியான மண்டலங்களை நியமிக்கவும்.
சத்தத்தைக் குறைக்கும் டயர்கள், மின்சார வாகனங்கள் மற்றும் சத்தமில்லாத இயந்திரங்கள் போன்ற சத்தத்தைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஒலி மாசுபாடுகளை குறைக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
பங்குபெற்றோர் விபரம் :
முதல்வர் ,இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள்.பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்
நன்றியுரை : இறுதி நிகழ்வாக ரஞ்சித் தாஸ் (பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாடப் பிரிவு) நன்றி தெரிவித்தார். தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு விழா நிறைவடைந்தது.