பள்ளிக்கு வெளியே நிற்கவைத்த ஆசிரியை.. தண்டவாளத்தில் தலை வைத்து மாணவன் தற்கொலை

பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்தால் 11ம் வகுப்பு மாணவன் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-24 13:45 GMT

மாணவன் ரிதுன்.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பகல் 12 மணியளவில் பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. வெப்படை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News