எல்.இ.டி. விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில், எல்.இ.டி. மின் விளக்கு கம்பங்களில், மின் இணைப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-01 03:15 GMT

குமாரபாளையத்தில்,   எல்.ஈ.டி. மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி  நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில்,  சாலை பாதுகாப்பு பணிக்காக 2 கோடி நிதி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும்,,  புதிய தார் சாலையாக மாற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, குமாரபாளையத்தில் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் கம்பங்கள்,  டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு, ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. விளக்கும் என, மொத்தம் 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி, நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, எல்.இ.டி. மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News