குமாரபாளையத்தில் மலடு நீக்க சிகிச்சை முகாம்
குமாரபாளையம் அருகே கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே வீ.மேட்டூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் மேட்டூர், நொய்யல் உபவடி நிலப்பகுதி மலடு நீக்க சிகிச்சை முகாம் குமாரபாளையம் அருகே வீ.மேட்டூர் பகுதியில் கால்நடை டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கன்று குட்டி மேலாண்மை, மலடு சிகிச்சை, மடி வீக்க நோய் தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் வீ.மேட்டூர், கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், சின்னாயகாடு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 550க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொண்டு வந்து இப்பகுதி விவசாயிகள் பயன் பெற்றனர்.