குமாரபாளையத்தில் மாநில அளவிலான மகளிர் கபடிப் போட்டி துவக்கம்

குமாரபாளையத்தில் மாநில அளவிலான மகளிர் இரு நாட்கள் கபடிப் போட்டி நேற்று துவங்கியது.;

Update: 2022-01-13 03:00 GMT

குமாரபாளையம் வட்டமலை எஸ்.எஸ்.எம். மகாலில் மாநில அளவிலான மகளிர் கபடிப் போட்டி துவங்கியது.

குமாரபாளையம் லயன்ஸ் கபாடி கிளப், தமிழ்நாடு ராஜீவ்காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மகளிர் இரு நாட்கள் கபடிப் போட்டி நேற்று துவங்கியது. பல்வேறு ஊர்களை சேர்ந்த 33 அணிகள் பங்கேற்றன. நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார்.

போட்டிகளை தட்டான்குட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் காந்திநாச்சிமுத்து, முன்னாள் நகர அ.தி.மு.க. செயலர் குமணன், ராஜீவ்காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் மோகன் துவக்கி வைத்தனர்.

அகில இந்திய நடுவர்கள் ஜெகன்னாதன், ராஜா, மாநில நடுவர்கள் சிலம்பு, சரவணன், நதியழகன் நடுவர்களாக பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இரண்டாம் நாள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

Tags:    

Similar News