குமாரபாளையம் மகளிரணி நிர்வாகியை பாராட்டிய மக்கள் நீதி மைய மாநில நிர்வாகிகள்
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டத்தில் குமாரபாளையம் மகளிரணி நிர்வாகியை மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகிகள் பாராட்டினர்.;
நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருச்செங்கோட்டில் வி.வி. மகாலில் மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர்கள் மயில்சாமி, மாநில மகளிர் அணி செயலர் மூகாம்பிகா பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு பணியாற்ற என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைத்தனர்.
மாநில மகளிர் அணி செயலர் மூகாம்பிகா பேசுகையில், குமாரபாளையம் நகர மகளிர் அணி செயலர் சித்ரா தினமும் நகரில் உள்ள குறைகள் கண்டறிந்து, அதனை நகராட்சி கமிஷனர், மின் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைத்து தரப்ப்பினரை சந்தித்து, குறைகளை சொல்லி, மனுவாக கொடுத்து, அந்த குறை தீர்க்கப்படும் வரை அதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்து குறைகளை உண்டனுக்குடன் நிவர்த்தி செய்து தருகிறார்.
இவரின் செயல் மாநில நிர்வாகிகளான எங்களுக்கு மட்டுமில்லாமல், தலைவர் கமல்ஹாசனுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. சித்ராவின் செயல்பாடுகளை தலைவர் கமல்ஹாசனும் கவனித்து வருகிறார். இவரை போல் மக்கள் குறை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினால் மக்கள் கவனம் நம் கட்சியின் பக்கம் திரும்பும் என தெரிவித்தார்.
மாநில துணை தலைவர் தங்கவேலு மற்றும் மாநில செயலர் மயில்சாமி பேசுகையில், குமாரபாளையம் சித்ரா என்றால் அவரின் செயல்பாடுகள்தான் கண் முன் வருகிறது. இவ்வளவு பணிகளை எப்படி செய்ய முடிகிறது என ஆச்சரியப்படும் வகையில், செய்து சாதித்து கொண்டுள்ளார். இவரின் சேவை தொடர வாழ்த்துக்கள். தலைவரும் இவரது பணியை கவனித்து வருகிறார் என தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் புதியதாக பொறுப்பு வழங்கப்பட்ட நபர்களுக்கு தலைவர் கமல்ஹாசன் கையொப்பத்துடன் கூடிய நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் மண்டல செயலர் ரவிச்சங்கர், காஞ்சி மண்டல செயலர் சண்முகம், மாவட்ட செயலர்கள் காமராஜ், பிரகாஷ், அதம் பரூக், நாமக்கல் மாவட்ட மகளிரணி செயலர் வசந்தி, குமாரபாளையம் நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, கிருத்திகா, பள்ளிபாளையம் நிர்வாகி மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.