துப்பாக்கி சுடுதல், வில் வித்தை போட்டியில் எஸ்.ஆர்.கே. பள்ளி சாதனை

School Shooting Game -குமாரபாளையம் அருகே உள்ள எஸ்.ஆர்.கே. பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2022-08-30 01:45 GMT

பல்லக்காபாளையம் எஸ்.ஆர்.கே. பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

School Shooting Game -குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் எஸ்.ஆர்.கே. பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையேயான வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் எஸ்.ஆர்.கே. பள்ளி மாணவ மாணவியர்கள் இரு போட்டிகளிலும் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை முதல்வர் கண்ணன், முதன்மை நிர்வாக அலுவலர் பிரகாஷ், நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News