ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் 55வது விளையாட்டு விழா..!
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் நடந்த 55வது விளையாட்டு விழாவில் முன்னாள் ஆசிய பதக்கம் வென்ற வீரர் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறினார்.;
ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் 55வது விளையாட்டு விழா : பாடங்களுடன் விளையாட்டு பயிற்சியும் அவசியம்- முன்னாள் ஆசிய பதக்கம் வென்ற வீரர் அறிவுரை
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் நடந்த 55வது விளையாட்டு விழாவில் முன்னாள் ஆசிய பதக்கம் வென்ற வீரர் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறினார்.
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் 55வது விளையாட்டு விழா தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆசிய பதக்கம் வென்ற வீரரும், இந்தியன் ரயில்வேயில் தடகள விளையாட்டு போட்டிகளின் பயிற்சியாளருமான மொஹம்மத் நிஜாமுதீன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது:
முன்பெல்லாம் விளையாட்டு வகுப்பை இதர ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை விரைவில் முடிக்க வேண்டும் என கடனாக கேட்டு பெற்று பாடங்களை நடத்துவார்கள். இப்போது அப்படி எல்லாம் நடக்காது என்று எண்ணுகிறேன். காரணம் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
விளையாட்டுகளில் பெறும் சான்றிதழ்கள் அவர்கள் மேல்படிப்புக்கு கூட உதவியாக உள்ளது. மேலும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஆகையால், மாணவ, மாணவியர் தங்கள் பாடங்களை படிப்பதுடன், விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெற்று அதிலும் தங்கள் சாதனைகளை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநில அளவிலான வாலிபால் வீரர் செந்தில்குமார் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், யோகா சாதனை நிகழ்சிகளும் நடந்தன.