பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது;
பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் விளையாட்டு தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை வலம் வந்த மாணவியர்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வடிவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.டி.ஏ. தலைவர் சவுந்திரம் விழாவை துவக்கி வைத்தார்.
புலவர் பெரியசாமி தேசியக்கொடி ஏற்றி வைக்க, பொறுப்பாளர் துரைசாமி விளையாட்டு விழா கொடியை ஏற்றி வைத்தார். துணை செயலர் நாச்சிமுத்து விளையாட்டு விழா தீபத்தை ஏற்றி வைத்தார்.
மாணவ, மாணவியர் இந்த விளையாட்டு தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை மூன்று முறை வலம் வந்தனர். இதர மாணவ, மாணவியர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதில் ஓட்டம், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், கோ-கோ.உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி வாழ்த்தினர்.
விளையாட்டு விழாவினை உடற்கல்வி ஆசிரியர் பாபு ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். பெற்றோர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.