ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து 5 கோடி மதிப்பிலான பஞ்சு சேதம் ?

பள்ளிபாளையம் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 கோடி மதிப்பிலான பஞ்சு சேதமானதாக கூறப்படுகிறது;

Update: 2022-01-03 16:45 GMT

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதி ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஸ்பின்னிங் மில்லில் நேரிட்ட   தீ விபத்தில் சுமார்5 கோடி மதிப்பிலான பஞ்சு சேதமாகி இருக்கலாம் என கூறப்படுறது.

பள்ளிபாளையம் அருகே வெப்படை சங்ககிரி சாலையில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில்  மாலை 02:00 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த வெப்படை மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கு காரணம் மின் கசிவா?அல்லது சதி வேலையா? என்பது குறித்து வெப்படை எஸ்.ஐ. வெற்றிவேல் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர். இதன் சேத மதிப்பு சுமார் 5 கோடி என கூறப்படுகிறது.



Tags:    

Similar News