பள்ளிபாளையத்தில் அயோத்தி செல்லும் 16 நதி தீர்த்தத்திற்கு சிறப்பு வழிபாடுகள்
பள்ளிபாளையத்தில் அயோத்தி செல்லும் 16 நதிகளின் தீர்த்தத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.;
அயோத்தி ராமபிரானின் ஆலயத்தில் அபிஷேகத்திற்கு செல்லவிருக்கும் 16 நதியின் தீர்த்தங்களுக்கு கவிஷ்வ ஹிந்து பரிசத் சார்பில், நிர்வாகிகள் கோட்ட செயலர் சபரிநாதன், மணிவண்ணன், நிர்வாகி நாகராஜ் தலைமையில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
பள்ளிபாளையத்தில் உள்ள பலரது வீடுகளில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஆன்மீக சான்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர். வழிபாடு நிறைவு பெற்றதும், 16 நதிகளின் தீர்த்தங்கள் வெகு விமரிசையாக வழியனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீகவாதி மணிவண்ணன் செய்திருந்தார்.
இது பற்றி சபரிநாதன் கூறுகையில், சிருங்கேரி மடம் மற்றும் சங்கர மேடம் சார்பில் கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி, உள்ளிட்ட 16 நதிகள் பிறக்கும் இடத்தில் இருந்து புனிதநீர் தீர்த்தம் சேகரிக்கப்பட்டது. இதே போல் ஒவ்வொரு நதியின் மண் சேகரிக்கப்பட்டது. 16 நதிகள் புனித தீர்த்தம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமபிரானுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. 16 நதியின் மண் ராமபிரான் பூஜையில் வைக்கப்படவுள்ளது.
ராமபிரான் பட்டாபிஷேக விழா நடந்த போது, ஸ்ரீஆஞ்சநேயர் 16 நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, ஸ்ரீராமருக்கு அபிஷேகம் செய்தாராம். அதே போல் 16 வகை மண் ராமபிரான் பாதத்தில் வைத்து அனுமன் பூஜை செய்தாராம். அதனை பின்பற்றும் நோக்கத்தில் இந்த ஏற்பாடுகள் நடைபெற்றுவ் வருகிறது என தெரித்தார்.