குமாரபாளையம் முருகன் கோவில்களில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் முருகன் கோவில்களில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Update: 2022-02-09 15:15 GMT

கிருத்திகையையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு கற்பக விநாயகர் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கிருத்திகை நாளையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கிருத்திகை நாளையொட்டி வட்டமலை முருகன் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், கோட்டைமேடு கற்பக விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், தேவாங்கர் மாரியம்மன் கோவில், சின்னப்ப நாயக்கன்பாளையம் முருகன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News