குமாரபாளையம்; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புரட்டாசி வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.
இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.