குமாரபாளையத்தில் துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் துர்க்காதேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
தை மாத செவ்வாய்க்கிழமையையொட்டி குமாரபாளையம் சுந்தரம் நகர் முருகன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரை கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.