பழமையான ஆஞ்சேநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் பழமையான ஆஞ்சேநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது.;

Update: 2024-03-10 16:45 GMT

குமாரபாளையம் நகர் பாலக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சேநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் பழமையான ஆஞ்சேநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது.

குமாரபாளையம் நகர் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

சிதிலமடைந்த இந்த கோவிலில் தற்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று இரவு அமாவாசை தினத்தையொட்டி, அப்பகுதி ஆஞ்சநேய பக்தர்கள் குழு சார்பில், சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் சுவாமிக்கு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பரமசிவம், சிவகுமார், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், நேசமணி, லட்சுமி, ஜெகதாம்பாள், ஜான்ஸ்ராணி, விஜயாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

சில நாட்கள் முன்பு இந்த கோவில் வளாகத்தில் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கோவிலை பழமை மாறாமல் இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்க வேண்டும், வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், தினமும் மூன்று கால பூஜை செய்யப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் சபரிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பலனாக தற்போது இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டு, தினமும் ஒரு கால பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கோவிலில் முன்பு இது சம்பந்தமாக போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

Similar News