வளர்பிறை அஷ்டமியையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத செவ்வாய் கிழமை மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.;

Update: 2021-09-14 15:30 GMT

ஆவணி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஆவணி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி,  குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சேவற்கொடியோர் பேரவை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பாண்டியன, யவனசோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News