ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தினம் சிறப்பு நிகழ்வு
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தினம் சிறப்பு நிகழ்வு
நிகழ்வின் தலைப்பு: "உலக புகைப்பட தினம்"
நிகழ்விடம்: கருத்தரங்கு கூடம்,
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.
நிகழ்ச்சி நடக்கும் தேதி: ஆகஸ்ட் 21, 2023
நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 11.00 மணி, திங்கள்க்கிழமை
முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கல்லூரியின் நிர்வாக இயக்குனர், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் முன்னிலையில்.
சிறப்பு விருந்தினர்: திரு. ஜி.என். சரவணன், ஒளிப்பதிவாளர்.
வரவேற்புரை: சு.சுவேதா இளநிலை அறிவியல் இரண்டாமாண்டு கணினி துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரவேற்புரை வழங்குவார்.
நிகழ்வின் சிறப்புரை: திரு. ஜி.என். சரவணன், ஒளிப்பதிவாளர் அவர்கள் "உலக புகைப்பட தினம்" பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.
பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.
நிகழ்வின் முக்கியத்துவம்:
ஒவ்வோரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி "உலக புகைப்பட தினம்" உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு புகைப்பட கருவிகள் அதனை உபயோகப்படுத்தும் முறைகள் மற்றும் புகைப்படம் எடுத்தல் பற்றி உத்திகளையும் அதில் உள்ள கலை நுணுக்களையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் புகைப்படம் எடுக்கும் திறன்களை மாணவர்கள் அறிந்து கொள்வர். அவர்களின் ஆர்வங்களை தூண்டி அவர்களை ஆற்றல் மிக்க புகைப்பட கலைஞராக மாற்ற இயலும். வருங்காலங்களில் திரைத்துறை மற்றும் தொழில்நுட்ப துறையில் அவர்கள் பணியாற்ற சிறந்த வாய்ப்பாக அமையும்.
வளர்ச்சி இலக்கு:
" உலக புகைப்பட தினம்"நிகழ்வின் மூலம் மாணவர்களின் புகைப்படம் எடுக்கும் ஆற்றலை வெளிக்கொணர முடியும். மேலும் மாணவர்களின் அறிவுத்திறனை வெளிக்கொண்டு வர சிறந்த வாய்ப்பாகவும் இந்நிகழ்வு வழிவகுக்கிறது.
நன்றியுரை:
" உலக புகைப்பட தினம்" நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி மு . ஜெயஶ்ரீ, இளங்கலை இரண்டாம் ஆண்டு ஆங்கில துறை மாணவி நன்றியுரை வழங்குவார்.