குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
குமாரபாளையத்தில், வட்ட வழங்கல் அலுவலக சிறப்பு முகாமில், 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன.;
குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில், சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தொலைபேசி எண்கள் மாற்றம், பெயர் சேர்த்தல், திருத்தங்கள், ஆதார் பதிவு சேர்த்தல், பெயர் நீக்கல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை தொடர்பான புகார் மனுக்கள் பொதுமக்கள் கொடுத்தனர்.
இது குறித்து டி.எஸ்.ஓ. வசந்தி கூறியதாவது: குமாரபாளையம் தொகுதி சார்பில், தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 55 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட 55 மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.