குமாரபாளையம் அரசு பள்ளி என்.சி.சி அலுவலருக்கு சிறந்த அலுவலர் விருது..!
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலருக்கு சிறந்த அலுவலர் விருது வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலருக்கு சிறந்த அலுவலர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி அந்தமான் நிகோபார் அளவிலான சிறந்த என்.சி.சி. அலுவலருக்கு விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விழாவில் ஈரோடு 15வது பட்டாலியன் அலுவலக அலுவலர் அஜய் குட்டிலோனா, மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் ஜெனெரல் கமோடர் அதுல்குமார் ராஸ்ட்ரோகி பங்கேற்று, அந்தோணிசாமிக்கு இவ்விருதினை வழங்கினார். துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்வு பெற்றவர்களுக்கு, சிறந்த என்.சி.சி. மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற அந்தோணிசாமியை தலைமையாசிரியர் அந்தோணிசாமி, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலரும் பாராட்டினர்.
என்சிசி மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு குமாரபாளையத்தில் நடைபெற்றது.
ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியனின் கமெண்ட் கர்னல் ஜெய்தீப் மற்றும் நிர்வாக அலுவலர் அஜய் குட்டினோ ஆகியோரின் ஆணையின்படியும் சுபேதார் மேஜர் சுரேஷ் ஆலோசனையின் படியும் பல்வேறு பள்ளிகளில் உள்ள என்.சி.சி மாணவர்களுக்கு காலை எழுத்து தேர்வும் மாலை செய்முறை தேர்வும் நடைபெற்றது. இத்தேர்வானது பள்ளியளவில் இரண்டு ஆண்டுகள் என்.சி.சி யில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடத்தப்படும்..
இவற்றில் குமாரபாளையம் எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் பள்ளியில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே கே ஆர் ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் உண்டு உறைவிடம் ஆகிய பள்ளிகளை சேர்ந்த 157 மாணவர்களுக்கு ncc தேர்வு நடைபெற்றது.. இவற்றில் 350 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் ,150 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இந்த செய்முறை தேர்வுகளில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை பிரித்துப் பூட்டுதல், தூரத்தை கணக்கிடுதல், வீரநடை பயிற்சி, வரைபட பயிற்சி மற்றும் வரைபட அளவீடுகள் போன்ற பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடைபெற்றது. இவற்றை ஈரோடு 15வது பட்டாலியனின் சுபேதார் அன்பழகன் மற்றும் ஹவில்தார் செல்லதுரை ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படும்.
இச்சான்றிதழானது ராணுவம், காவல்துறை, ரயில்வே துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளிலும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற கல்லூரி படிப்புகளுக்கும் இரண்டு சதவீதம் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். இவற்றை என்.சி.சி அலுவலர்கள் அந்தோணிசாமி, சிவக்குமார், ராஜேஷ்குமார், முருகேசன் ஆகியோர் உடனிருந்து ஏற்பாடுகளை செய்தார்கள்.