பேரிடர் மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட எஸ்.பி

குமாரபாளையத்தில் பணியில் உள்ள பேரிடர் மீட்பு படையினருக்கு எஸ்.பி.ஆலோசனை வழங்கினார்

Update: 2022-10-17 18:00 GMT

குமாரபாளையம் மணிமேகலை தெரு உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில், தாழ்வான பகுதியில் பொக்லைன் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.

பேரிடர் மீட்பு படையினருக்கு குமாரபாளையத்தில் போலீஸ் எஸ்.பி.ஆலோசனை வழங்கினார்.

காவிரி வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு படையினர் குமாரபாளையம் வந்துள்ளனர். இவர்கள் மீட்பு பணிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் காவிரி கரையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, குமாரபாளையம் வந்து பேரிடர் மீட்பு படையினரை சந்தித்து, பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.

பின்னர் போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி  கூறியதாவது: காவிரி வெள்ளத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு படையினர் 34 பேர் வந்துள்ளனர். இவர்கள் பள்ளிபாளையத்திலும் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை. வெள்ள நீர் பாதிப்பால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் எவ்வித திருட்டு சம்பவங்களும் நடக்காமல் இருக்க 24 மணி நேர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

பின்னர், காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளத்தையும், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்களையும் எஸ்.பி. சாய் சரண்தேஜஸ்வி பார்வையிட்டார். பொதுமக்களுக்கு தினமும்  நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகர தி.மு.க. செயலர் செல்வம் உள்ளிட்டோர் மூன்று வேளை உணவு வழங்கி வருவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண் கொட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு   நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிமேகலை தெரு உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில், தாழ்வான பகுதியில் பொக்லைன் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.

குமாரபாளையம் மணிமேகலை தெரு முதல் காவேரி நகர் எல்லை வரை, காவிரி கரையோர பகுதிகள் ஆகும். அங்காளம்மன் கோவில் பகுதி, கலைமகள் வீதி, அண்ணா நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் காவிரி கரையில் உள்ளதால் அடிக்கடி வெள்ள நீர் புகுந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அதனால் காவிரி கரையோரமாக 2 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து பல அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் பல போராட்டங்கள் நடத்தினர். இதுவரை பலனில்லை. கரையோர பகுதி மக்களுக்கு பாதுகாப்பு மையங்களில் அரசியல் கட்சியினர் உணவு வழங்கி வந்தாலும், கடந்த முறை உணவு வாங்க வந்த பெண் ஒருவரை பார்த்து, நீ இப்போதானே வாங்கிச் சென்றாய்? என்று கூறயதால், அவர் பாதுகாப்பு மையத்தை விட்டு வெளியேறி, காவிரியில் வெள்ளம் வடியாத நிலையில், ஆபத்தான சூழ்நிலையில் அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று விட்டார். பலர் நேரில் சென்று அழைத்தும் வரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலரையும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு வேளை உணவு வழங்கி விட்டு, உணவு வாங்க வருபவர்களை ஏளனமாக பார்ப்பது சிலருக்கு பிடிக்காமல் உள்ளது. அதனை அந்தந்தக் கட்சியினர் போட்டோ எடுத்து சமூக வலைதளைங்களில் பதிவிடுவதிலும் பலருக்கும் உடன்பாடு இல்லை.  வேலைக்கு சென்று விட்டு திரும்ப சற்று தாமதாகி விட்டால், உணவு வழங்குபவர்கள் குறிபிட்ட நேரத்தில் உணவு வழங்கி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் தாமதமாக வந்தவர் உணவு கிடைக்காமல் பசியுடன் மீண்டும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து அனுப்ப முடிவதில்லை. அங்கேயே சாப்பிடும் வகையில் பாக்கு மட்டையில்தான் உணவு வழங்கப்படுகிறது. மதியம் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப உணவு வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பு மையங்களில் தங்குவது பெரிதல்ல. இது போன்ற பல சங்கடங்களை சமாளித்து இருக்கும் நிர்பந்தம் ஏற்படுவதுதான் வேதனையிலும் வேதனை. குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் உணவு வழங்கும் போது அவர்கள் கட்சி உறுப்பினர்களுக்கே  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கடந்த மாதம் இதே போல் பாலக்கரை அண்ணா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,  பொதுமக்ளுக்கு ஆறுதல் சொல்ல சென்ற போது அப்பகுதி மக்கள் கூறியதாவது:  மூன்று வேளையும் உணவு வழங்குகிறோம் என்று கூறிச் சென்றனர். ஆனால், யாரும் வரவில்லை. காவிரி கரையோர பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால்,  வீட்டு உபயோக கருவிகளை இயக்க முடியாமல், உணவு சமைக்க முடியாமல்  போனது. நாங்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், உணவு மறுக்கபடுகிறது. நீங்கள் ஏற்பாடு செய்து தாருங்கள் என வேண்டுகேள் விடுத்தனர். இதைக்கேட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, இன்று முதல் நான் உணவு வழங்குகிறேன் என்று உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இதில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ.-க்கள் ஜனார்த்தனன், செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.





Tags:    

Similar News