சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா..!
குமாரபாளையத்தில் பல இடங்களில் சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா நடந்தது.;
சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா
குமாரபாளையத்தில் பல இடங்களில் சவுண்டம்மன் யாக பூஜை மற்றும் பூணூல் திருவிழா நடந்தது.
குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் பூணூல் திருவிழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில் யாக சாலை பூஜை, சக்தி அழைப்பு வைபவம், பொங்கல் விழா நடந்தது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காவேரி நகரில் வீர குமாரர்கள் சார்பில் பூணூல் திருவிழா கொண்டாடப்பட்டது. சக்தி அழைப்பு வைபவத்தில் வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். விட்டலபுரி பகுதியில் நடந்த சக்தி அழைப்பு வைபவத்தில் அம்மனை கத்தி போட்டவாறு, அப்பகுதி முழுதும் வீர குமாரர்கள் அழைத்து வந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த சவுண்டம்மன் பூணூல் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆவணி அவிட்டம் என்பது பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பூணூல் அணிபவர்கள் அதிகம் கடை பிடித்து வரும் ஒரு சடங்காகும். ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் ஆண்களால் கடைபிடிக்கப்படும் சிறப்பான வழிபாடாகும்.