கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: மருமகள் மீது மாமியார் புகார்
குமாரபாளையம் அருகே மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்ததாக மாமியார் தேவூர் போலீசில் புகார் செய்துள்ளார்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டன்பட்டி பகுதியில் வசிப்பவர்கள். தயானந்தன், 30, அன்னபிரியா, 22, தம்பதியர். இவர்களுக்கு 2 வயதான ரஞ்சித் என்ற மகன் உள்ளான்.
அதிகாலை தயானந்தன் கொலை செய்யப்பட்டதாக உறவினர் சசிகலா மூலம், தயானந்தன் தாயார் கஸ்தூரிக்கு தகவல் தெரியவர, தன் மகள் புவனாவுடன் நேரில் சென்று பார்த்தார். வீட்டில் உள்ள படுக்கை அறையில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் தரையில் இறந்து கிடந்தார்.
இது பற்றி கஸ்தூரி தேவூர் போலீசில் புகார் செய்தார். இதில் இவர், தன் மருமகள் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவனுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனைப் பலமுறை தன் மகன் கண்டித்துள்ளான்.
இதனால் மருமகள் மற்றும் ராஜா சேர்ந்து கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து விட்டனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.