குமாரபாளையத்தில் பாம்பை பிடித்த மீட்புக் குழுவினர்
குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் புகுந்த பாம்பை மீட்புக் குழுவினர் பிடித்தனர்.;
குமாரபாளையத்தில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பிடிப்பட்ட பாம்பு
குமாரபாளையம் வட்டமலை வாத்தியார் தோட்டம் பகுதியில் வசிப்பவர் சண்முகம், 52. இவரது வீடு அருகில் பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் சென்ற மீட்புக்குழுவினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது நாக பாம்பு இனத்தை சேர்ந்தது எனவும் மீட்புக்குழுவினர் கூறினர். பிடிபட்ட பாம்பை ஆள் நடமாட்டமில்லாத வனத்துறை பகுதியில் விடப்பட்டது.
அதிக முட்புதர்கள் மண்டி கிடப்பதே இதற்கு காரணமாக உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் இடம் என்பதால், நோய்கள் பரவாமல் இருக்கவும், இது போல் விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கவும் இந்த பகுதியில் தூய்மை பணியினை தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.