இரண்டு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம்..!
குமாரபாளையத்தில் இரண்டு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் இரு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ஜே.கே.கே.நடராஜா நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, ஜே.கே.கே.சுந்தரம் நகர் நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் டிஜிட்டல் திரை மற்றும் குளிர்சாதன வசதியுடன், புதிய மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. வடக்கு நகர திமுக பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து பள்ளிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் கூறினார். நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் மகேஸ்வரி, விஜயா, கதிரவன் சேகர், அழகேசன், நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ் நாடு அரசு, அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை அதிகரித்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.