சீரடி சாய்பாபா கோவில் 8ம் ஆண்டு ராம நவமி, சந்தனக்குட உரூஸ் விழா
குமாரபாளையம் சீரடி சாய்பாபா கோவில் சார்பில் 8ம் ஆண்டு ராம நவமி, சந்தனக்குட உரூஸ் விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் சீரடி சாய்பாபா கோவில் சார்பில் 8ம் ஆண்டு ராம நவமி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
மாலை பூலக்காடு துவாரகாமாயி ஆலயத்திலிருந்து ராமர் கோவிலுக்கு சாய் பக்தர்கள் ஊர்வலமாக வந்து, ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கிருந்து குதிரை முன்னால் வர, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீரடி சாய்பாபா அருள்பாலித்தவாறு வர, பக்தர்கள் பல்லக்கை மீண்டும் 3 கி.மீ. தொலைவில் உள்ள துவாரகாமாயி ஆலயத்திற்கு மேள, தாளங்கள் முழங்க சுமந்து வந்தனர்.
இதன் பின்னால் ராமர், சீதை, லட்சுமணர், சீரடி சாய்பாபா, அனுமன் வேடமணிந்த குழந்தைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்தனர். சாய் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் முருகேசன் மற்றும் சேவாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.