பள்ளிபாளையம் பிரிவில் விபத்தை தடுக்க சிக்னல் கம்பங்கள் அமைப்பு..!
குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் விபத்தை தடுக்க புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன.;
பள்ளிபாளையம் பிரிவில் விபத்தை தடுக்க சிக்னல் கம்பங்கள் அமைப்பு
குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் விபத்தை தடுக்க புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன.
குமாரபாளையம் நகரின் முக்கிய மையப்பகுதியாக இருந்து வருவது பள்ளிபாளையம் பிரிவு சாலையாகும். பல பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த பிரிவுசாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதனால் எப்போதும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கும்.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இனி இப்பகுதியில் விபத்துக்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல் ஆனங்கூர் பிரிவு சாலை, போலீஸ் ஸ்டேஷன் அருகே இடைப்பாடி பிரிவு சாலை ஆகிய பகுதியில் கூட சிக்னல் கம்பங்கள் அமைக்க வேண்டும்.