குமாரபாளையத்தில் காலாவதியான பால் விற்பனை செய்த கடைக்கு சீல்

குமாரபாளையத்தில் உள்ள கடையில் காலாவதியான பால் விற்றதால் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து சீல் வைத்தார்.

Update: 2022-07-13 14:30 GMT

குமாரபாளையம் பால் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பால் கடை ஒன்றில் உற்பத்தி தேதி இல்லாமல் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் நேற்று  குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது பற்றி இளங்கோ கூறும்போது குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள பால் கடையில் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உற்பத்தி தேதி போடப்படாத 90 லிட்டர் பால், 230 லிட்டர் மோர், 110 லிட்டர் தயிர், தின்பண்டங்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கடை மூடப்பட்டிருக்கும் என்றார்.

Tags:    

Similar News