எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீச்சு: குமாரபாளையம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்வர் எடைப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசியதற்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையம் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். சம்பவத்துக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் திருநாவுக்கரசு, புருஷோத்தமன், சிங்காரவேல், பழனிச்சாமி, முருகேசன், ராஜு, வரதராஜன், சேகர், பச்சியம்மாள், உள்பட பலர் பங்கேற்றனர்.