குமாரபாளையம் நகராட்சியின் புதிய மேலாளராக சண்முகம் பொறுப்பேற்பு
குமாரபாளையம் நகராட்சியின் புதிய மேலாளராக சண்முகம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
குமாரபாளையம் நகராட்சி புதிய மேலாளராகச் சண்முகம் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் இதற்கு முன் மேலாளராக பணியாற்றிய குமரேசன், தற்போது திருச்செங்கோடு நகராட்சிக்கு பணியிட மாறுதலில் சென்றுள்ளார். புதிய மேலாளர் சண்முகம் 2007, 2008 ஆண்டுகளில் குமாரபாளையம் நகராட்சியில் ஆர்.ஐ. ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட சண்முகத்திற்கு ஆணையர் ஸ்டான்லிபாபு, பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன், ஆர்.ஐ. கோபால், அலுவலர்கள் சந்தோஷ், புருஷோத்தமன், பாஸ்கர் உள்படப் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.